×

விஜய் வெளியிட்ட தெலுங்கு பட டிரைலர்; கலெக்க்ஷன் எகிற போகுது.

 

 பிரதீப் ரங்கநாதனின்லவ் டுடேபடத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக உருவாகி  கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான திரைப்படம்லவ் டுடே’, இந்த படத்தைகோமாளிபடத்தின் இயக்குநரான, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

இப்படத்தில் காதல் ஜோடி தங்களது மொபைல் போனை மாற்றிக் கொள்ளும் சூழல் வருகிறது இதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா! என்பதே இந்த படத்தின் கதைக்களம்.


தமிழில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும்லவ் டுடேபடம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ‘வாரிசுபடத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூதான், தனது ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிடுகிறார். இந்த நிலையில் படத்தின் தெலுங்கு டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதனை பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.

<a href=https://youtube.com/embed/BWkP95PazWo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BWkP95PazWo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Love Today Telugu - Official Trailer | @Pradeep Ranganathan | Yuvan Shankar Raja | AGS" width="841">