×

படப்பூஜையுடன் தொடங்கிய மெகா ஸ்டாரின் ‘லூசிஃபர்’… அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங்…

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் லூசிஃபர் படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது. மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்த படம் லூசிஃபர். பிரம்மாண்ட ஹிட் அடித்த இந்த படம் பெரும் வசூலை வாரி குவித்தது. அரசியல் பேசும் இந்த படத்தின் திரைக்கதையை அழகாக காட்சிகளாக்கி இருந்தார் இயக்குனர். தமிழில் டப்பாகி வெளி வந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வெற்றியை அடுத்து தெலுங்கில் அந்த படத்தை ரீமேக் செய்ய அதன் உரிமையை
 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் லூசிஃபர் படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது.

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்த படம் லூசிஃபர். பிரம்மாண்ட ஹிட் அடித்த இந்த படம் பெரும் வசூலை வாரி குவித்தது. அரசியல் பேசும் இந்த படத்தின் திரைக்கதையை அழகாக காட்சிகளாக்கி இருந்தார் இயக்குனர். தமிழில் டப்பாகி வெளி வந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த வெற்றியை அடுத்து தெலுங்கில் அந்த படத்தை ரீமேக் செய்ய அதன் உரிமையை வாங்கினார் நடிகர் ராம் சரண். இதையடுத்து இந்த படத்தில் நடித்த மோகன் லால் கதாபாத்திரத்தை சிரஞ்சீவி நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. தெலுங்கு இயக்குநர்கள் சுஜித், வி.வி.விநாயக், இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கடைசியில் மோகன்ராஜா இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

19 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தை இயக்கவுள்ள மோகன்ராஜா, அதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதிக கதாபாத்திரங்களை கொண்ட பெரிய படம் என்பதால் நடிகர்கள் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்.பி .சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் மோகன்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது.