×

அடுத்த படத்திற்கு தீவிர பயிற்சியில் இறங்கிய மகேஷ்பாபு

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்துவருகிறது. 

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான ஜெர்மனியில் உள்ள பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று உடல் ரீதியாகவும், சண்டை க்காகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.