முன்னணி மலையாள நடிகர் மறைவு... சோகத்தில் திரையுலகம் !
முன்னணி மலையாள நடிகரான இன்னொசென்ட் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் இன்னொசென்ட். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
சினிமாவிற்கு பிறகு அரசியல் செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று இரவு காலமானார். அவரின் மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொசென்ட் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, திலீப், பிரத்விராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.