மலையாள நடிகர் சுரேஷ் கோபி வழங்கிய தங்க கிரீடத்தால் புதிய சர்ச்சை
Mar 4, 2024, 19:11 IST
90களில் பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி. 65 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பில் ஆர்வம் செலுத்துவதை குறைத்துவிட்டு, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் அவர் உள்ளார். சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது.
இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபி, தனது மனைவி ராதிகாவுடன் சேர்ந்து கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தேவாலயத்திற்கு தங்க கிரீடத்தை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது செம்பு முலாம் பூசப்பட்டது என புகார் எழுந்துள்ளது.