×

நிறைமாத கர்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.

 

மலையாள சின்னத்திரை நடிகை பிரியா நிறைமாதம் கர்பமாக இருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

மலையாள தொடரான கருத்தமுத்து தொர் மூலமாக பிரபலமானவர் பிரியா. இவர் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த பிரியா தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் நிறைமாத கர்பிணியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் பிரியாவுக்கு செவ்வாய்கிழமையன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். விரைந்து அவரது வயிற்றில் உள்ள சிசுவை மீட்ட மருத்துவர்கள் அதற்கு அவசர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். நிறைமாத கர்பிணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.