பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை,  வில்லனும் இல்லை - மம்மூட்டி 

 
பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை,  வில்லனும் இல்லை - மம்மூட்டி 

மம்முட்டி தற்போது பிரம்மயுகம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இப்படத்தில், மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமல்டா லீஸ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளன. கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டைட்டில் லுக் போஸ்டரையும், டிரைலரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை,  வில்லனும் இல்லை - மம்மூட்டி 

இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படம் குறித்து பேசிய நடிகர் மம்மூட்டி, படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என யாருமே இல்லை. படத்தில் முழுக்க முழுக்க கதாபாத்திரங்கள் மட்டுமே பேசும் என தெரிவித்துள்ளார்.