ஹாரர் படத்தில் நடிக்கும் மம்மூட்டி.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !
நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.
மலையாள சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மம்முட்டி. அவருக்கு வயது 70 ஆகிவிட்டாலும் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் மம்மூட்டி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘பிராமயுகம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் ஹாரர் த்ரில்லர் கதைக்களம் கொண்டது. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கவுள்ளார்.
நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.