×

மம்மூட்டி நடிக்கும் பிரம்மயுகம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 

மம்முட்டி நடிப்பில் உருவாகும் பிரம்மயுகம் திரைப்படத்தில் அவரது படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

மம்முட்டி தற்போது பிரம்மயுகம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இப்படத்தில், மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமல்டா லீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.

இந்நிலையில், படத்தில் மம்மூட்டி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது. படத்தின் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.