×

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் 50-வது படம்!

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கும் 50-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழில் நயன்தாராவைப் போல் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். பிரபல கேரள நடிகர் திலீப்பை திருமணம் செய்தபின் நடிப்பில் ஈடுபடாமல் இருந்த மஞ்சு வாரியர் பின்பு அவருடன் விவாகரத்து பெற்ற பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடங்களுக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படம்தான்
 

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கும் 50-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் நயன்தாராவைப் போல் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். பிரபல கேரள நடிகர் திலீப்பை திருமணம் செய்தபின் நடிப்பில் ஈடுபடாமல் இருந்த மஞ்சு வாரியர் பின்பு அவருடன் விவாகரத்து பெற்ற பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடங்களுக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படம்தான் தமிழில் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ என்று ரீமேக் செய்யப்பட்டது.

மஞ்சு வாரியர் ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நடித்த ஒரு படத்திலே தமிழ் ரசிகர்கள் அனைவரும் மனதையும் வென்றார்.

தற்போது மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘9 எம்.எம்(9 MM)’ என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை தினில் பாபு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சன்னி வெய்ன், திலீஷ் போத்தன் மற்றும் தியான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மஞ்சு வாரியர் தி ப்ரைஸ்ட், லலிதம் சுந்தரம், படவெட்டு, வெள்ளரிக்கா பட்டணம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.