×

பிரபாஸ் படத்திற்கு உடனே ஓகே சொன்ன பிரபஞ்ச அழகி… கதை கூட கேட்கவில்லையாம்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட் என்னவென்றால், முன்னாள் மிஸ் இந்தியா
 

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட் என்னவென்றால், முன்னாள் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்ற நடிகை சிம்ரன் கவுர் முண்டி ராதே ஷ்யாம் படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்கு முக்கியக் கதாபாத்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இணைந்ததை அடுத்து நடிகை மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். படத்திற்காக அவரை அணுகிய போது படத்தின் ஸ்கிரிப்ட்டைக் கூட கேட்காமல் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜஸ்டின் பிரபாகரன் தென்னிந்திய மொழிகளுக்கும் மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் இருவர் இந்தி மொழிக்கும் இசையமைக்கின்றனர்.