×

மோகன்லால் இயக்கும் பிரம்மாண்ட சரித்திரத் திரைப்படம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ‘பர்ரோஸ்(Barroz)’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகிறார். இது அவரது கனவுத் திரைப்படம் என்று கூட சொல்லலாம். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இந்தப் படம் துவங்குவதாக இருந்தது. பின்னர் லாக்டவுன் காரணமாக படம் வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் படம் 400 ஆண்டுகளாக வாஸ்கோ டா காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களின் பாதுகாவலரான போர்த்துகீசிய புராண நபரான பரோஸ் என்பவரின் வாழ்க்கையை
 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ‘பர்ரோஸ்(Barroz)’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகிறார். இது அவரது கனவுத் திரைப்படம் என்று கூட சொல்லலாம். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இந்தப் படம் துவங்குவதாக இருந்தது. பின்னர் லாக்டவுன் காரணமாக படம் வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தப் படம் 400 ஆண்டுகளாக வாஸ்கோ டா காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களின் பாதுகாவலரான போர்த்துகீசிய புராண நபரான பரோஸ் என்பவரின் வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டது. மை டியர் குட்டிச்சாதன் என்ற படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களுக்கு 3D டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய ஜிஜோ புன்னூஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்.

ஏஆர் ரஹ்மானின் சிஷ்யன் லிடியன் நாதஸ்வரம் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.

அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கானா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ஷைலா மெக்காஃப்ரி என்ற குழந்தை நட்சத்திரம், ஸ்பானிஷ் நடிகர் ரஃபேல் அமர்கோ மற்றும் விருது பெற்ற நடிகர் பாஸ் வேகா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இரண்டு மலையாள நடிகர்கள் மட்டுமே நடிக்கின்றனர். அது மோகன் லாலும், பிரதாப் போத்தனும் தான். மீதி எல்லோரும் வெளிநாட்டு நடிகர்கள் தான்.

ஸ்பெயின், போர்ச்சுகல், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் கடல் வரலாற்றின் பின்னணியில் இந்த படம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நாடுகளின் தலைமுறைகள் கடந்து வந்த வரலாற்றைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது.