×

மோகன்லாலும் கமலை தொடர்ந்து இணையும் மற்றொரு தமிழ் நடிகர்... 'மலைக்கோட்டை வாலிபன்' புதிய அப்டேட் !

 

மோகன்லாலின் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் நடிகர் ஜீவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவர் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'மலைக்கோட்டை வாலிபன்'. இந்த படத்தில் மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வருகிறார். 

 

இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்து வருகிறார். இவர்களுடன் ஹரீஷ் பெரேடி, டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கமலை தொடர்ந்து நடிகர் ஜீவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 'ஜில்லா' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் மோகன்லாலுடன் ஜீவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.