×

தொடங்கியது மோகன்லாலின் ‘விருஷபா’.. படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் 

 

மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் நடிக்கும் திரைப்படம் ‘விருஷபா’. காவிய ஆக்‌ஷன் என்டர்டெயின்ராக உருவாகும் இந்த படத்தை ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜூஹி ப்ரேக் மேக்கா தயாரிக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிகர் ரோஷன் மேகா, பாலிவுட் நடிகைகள் ஷனாயா கபூர், சஹ்ரா எஸ்.கான், ஸ்ரீகாந்த் மேகா, ராகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் நந்தா கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. தற்போது ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.