×

மீண்டும் திரையில் இணையும் சமந்தா – நாகசைதன்யா கூட்டணி!

நிஜ வாழ்க்கை ஜோடிகளான நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் மீண்டும் திரையில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் தற்போது தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘யே மாயா செசாவ்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.
 

நிஜ வாழ்க்கை ஜோடிகளான நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் மீண்டும் திரையில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் தற்போது தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கின்றனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘யே மாயா செசாவ்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து ஆட்டோ நகர் சூர்யா, மற்றும் ‘மஜிலி’ போன்ற பல படங்களிலும் ஒன்றாக நடித்தனர். தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைய இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

‘பங்கர்ராஜு’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்யாண கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணந் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான சோகேட் சின்னி நயனா படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நாகசைதன்யா ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து வருகிறார்.சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.