×

'கஸ்டடி' நாகசைதன்யாவிற்கு சொதப்பியதா ?... வசூல் இல்லாததால் அதிர்ச்சி !

 

 நாகசைதன்யா நடிப்பில் வெளியான 'கஸ்டடி: திரைப்படம் வெறும் 4 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.  

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கஸ்டடி' போலீஸ் கதைகளத்தில் உருவான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. வரிசையாக நாகசைதன்யாவ்  திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தார்.  ஆனால் இந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். 

 

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. அதேநேரம் இந்தப் படம் முதல் நாளில் வெறும் நான்கு கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இது படக்குழுவினரை மிகுந்த ஏமாற்றத்தில் உறைய வைத்துள்ளது.