×

தசராவை முடித்த நானி... படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் 

 

நானியின் 'தசரா' படத்தின் படப்பிடிப்பு ஒட்டு மொத்தமாக நிறைவுபெற்றுள்ளது. 

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. 

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் நானியின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.  இதையடுத்து உடனடியாக தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.