×

நானியின் ‘தசரா’ படத்திற்கு 15 இடத்தில கட்.. அதிர்ச்சியில் படக்குழுவினர் !

 

 நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்தில் இடம்பெற்ற 15 காட்சிகளை சென்சார் போர்டு நீங்கியுள்ளது. 

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானியின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. நிலக்கரி சுரங்க பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

 இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பைனல் காஃபி சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை முழுவதுமாக பார்த்த சென்சார் போர்டு 15 இடங்களில் உள்ள காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.