×

நானி உடன் ஜோடி சேரும் நஸ்ரியா!

நடிகை நஸ்ரியா தெலுங்கு நடிகர் நானியுடன் ஒரு புதிய படத்தின் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் தோன்றினார். நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், பின்னர் ராஜா ராணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்போதும் கூட பல பசங்களுக்கு நஸ்ரியா தான் க்ரஷ். பல படங்களில் நடித்த நஸ்ரியா கடந்த 20140-ம் ஆண்டு மலையாள நடிகர்
 

நடிகை நஸ்ரியா தெலுங்கு நடிகர் நானியுடன் ஒரு புதிய படத்தின் இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் தோன்றினார். நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், பின்னர் ராஜா ராணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்போதும் கூட பல பசங்களுக்கு நஸ்ரியா தான் க்ரஷ்.

பல படங்களில் நடித்த நஸ்ரியா கடந்த 20140-ம் ஆண்டு மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மலையாள சினிமாவின் பிரபல ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த நஸ்ரியா, கூடே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது நேச்சுரல் ஸ்டார் நானி உடன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவேக் ஆத்ரேயா என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். நவம்பர் 21 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது.