×

நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் அறிமுகமான நஸ்ரியா, அதையடுத்து நிவின் பாலிக்கு ஜோடியாக நேரம் படத்தில் நடித்தார். பின்னர் ராஜா ராணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்போதும் கூட பல பசங்களுக்கு நஸ்ரியா தான் க்ரஷ். பல படங்களில் நடித்த நஸ்ரியா 2014-ம் ஆண்டு ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மலையாள சினிமாவின் பிரபல ஜோடியாக
 

நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் அறிமுகமான நஸ்ரியா, அதையடுத்து நிவின் பாலிக்கு ஜோடியாக நேரம் படத்தில் நடித்தார். பின்னர் ராஜா ராணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்போதும் கூட பல பசங்களுக்கு நஸ்ரியா தான் க்ரஷ்.

பல படங்களில் நடித்த நஸ்ரியா 2014-ம் ஆண்டு ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மலையாள சினிமாவின் பிரபல ஜோடியாக வலம் வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த நஸ்ரியா, ‘கூடே’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது நேச்சுரல் ஸ்டார் நானி உடன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவேக் ஆத்ரேயா என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். விவேக் சாகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அண்டே சுந்தரனிக்கி’ தலைப்பிடப்பட்டுள்ளது. மோஷன் போஸ்ட்டரைப் பார்க்கும் போது படம் ரொமான்ஸ் காமெடி ஜேர்னரில் உருவாவதாகத் தெரிகிறது.