×

ஃபைட்டர் படத்திலிருந்து புதிய போஸ்டர் வைரல்

 

ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ பாலிவுட் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைக்கிறார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஃபைட்டர் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.