டேராடூன் கிளம்பிய வருண் - லாவண்யா தம்பதி

 
டேராடூன் கிளம்பிய வருண் - லாவண்யா தம்பதி

தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் லாவண்யாவும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் 'அந்தாரிக்‌ஷம்' என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இத்தாலியில் டசுக்கனி நகரில் இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில்  இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்லு அர்ஜூன், நாக சைதன்யா, சிரஞ்சீவி என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். 

null