×

அந்தாதுன் தெலுங்கு ரீமேக்… துபாயில் தொடங்கிய ஷூட்டிங்!

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக் படத்தின் ஷூட்டிங் நேற்று துபாயில் தொடங்கியுள்ளது. இந்தியில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் 2018-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் ராதிகா ஆப்தே கதாபத்திரத்திலும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். மெர்லபகா காந்தி இப்படத்தை இயக்குகிறார். நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கியுள்ளது.
 

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக் படத்தின் ஷூட்டிங் நேற்று துபாயில் தொடங்கியுள்ளது.

இந்தியில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் 2018-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது.

அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் ராதிகா ஆப்தே கதாபத்திரத்திலும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். மெர்லபகா காந்தி இப்படத்தை இயக்குகிறார்.

நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கியுள்ளது. நிதின் பியானோ வாசிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதைத் தெரிவித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் உடன் ‘ராங் தே’ படத்தை முடித்த நிதின் தற்போது இந்தப் படத்தைத் துவங்கியுள்ளார்.

இதற்கிடையில், ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்க உள்ளார். தியாகராஜன் தயாரிக்கிறார். இப்பட வேலைகள் குறித்த அப்டேட் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.