×

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனருக்கு ரேஞ்ச் ரோவர் கார் பரிசளித்த நடிகர்!

தெலுங்கு நடிகர் நிதின், தனது பட இயக்குனரின் பிறந்தநாளுக்கு பரிசாக விலை மதிப்புமிக்க கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நடிகர் நிதின் நடிப்பில் வெளியான பீஷ்மா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வந்த நிதினுக்கு மிகவும் ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுத்த படம் பீஷ்மா. எனவே வெங்கி குடுமுலா மீது நிதினுக்கு தனி மரியாதை உருவாகிவிட்டது. இயக்குனர் வெங்கி குடுமுலா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது சினிமா வாழ்க்கையில்
 

தெலுங்கு நடிகர் நிதின், தனது பட இயக்குனரின் பிறந்தநாளுக்கு பரிசாக விலை மதிப்புமிக்க கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நடிகர் நிதின் நடிப்பில் வெளியான பீஷ்மா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வந்த நிதினுக்கு மிகவும் ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுத்த படம் பீஷ்மா. எனவே வெங்கி குடுமுலா மீது நிதினுக்கு தனி மரியாதை உருவாகிவிட்டது.

இயக்குனர் வெங்கி குடுமுலா  இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு நிதின் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட இயக்குனர் “நீங்கள் சிறந்த நபருடன் ஒரு சிறந்த படத்தை உருவாக்கும் போது, ​​சிறந்த விஷயங்கள் நடக்கும்! இந்த சிறந்த பிறந்தநாள் பரிசுக்கு மிக்க நன்றி நிதின்… அதிக அன்புடன்” என்று தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் பிரபாஸ் கூட தனது ஜிம் டிரைனருக்கு ரேஞ்ச் ரோவர் கார் தான் பரிசளித்திருந்தார்.