×

பாக்ஸராக மாறிய பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

 

ஜோஷியின் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன் நடிக்கும் 'ஆண்டனி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. 

மலையாளத்தின் பிரபல இயக்குநர் ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் இரண்டாவது கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது ஆண்டனி படம். படத்திற்கு எழுத்தாளர் ராஜேஷ் வர்மா கதை எழுதி உள்ளார். இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படம் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

<a href=https://youtube.com/embed/lWowJyOrLJ0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/lWowJyOrLJ0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.