3டியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’... ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு !
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் சொதப்பிய நிலையில் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் கடந்தாண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் நம்பகத் தன்மையை இழந்தது. ஏனென்றால் படத்தின் டீசர் அனிமோஷன் படம் போன்று இருப்பதாக ட்ரோல் செய்யப்பட்டது.
அதனால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக சில கோடிகளை செய்து புதிய தொழிற்நுட்பத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி 3டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.
முழுக்க முழுக்க 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.