×

இரண்டே நாளில் 240 கோடி... ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு ரசிகர்கள் ஆதரவா ? 

 

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. 

இந்த படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதற்கு காரணம் படத்தில் இடம்பெற்று கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் 140 கோடி வசூலித்தது. இதையடுத்து இரண்டாவது நாளில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் 70 கோடியும், பிராந்திய மொழிகளில் 135 கோடியும் வசூலித்துள்ளது. எதிர்மறை பெற்று வரும் இந்த படம் எப்படி இவ்வளவு வசூலிக்கிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.