×

தெலுங்கு படத்தில் சிவனாக நடிக்கும் பிரபாஸ்?

 

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணு மஞ்சு நடிப்பில் கண்ணப்பா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தில் பிரபாஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கடவுள் சிவனாக நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படம். எனவே படத்தில் பிரபாஸை சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோனின் சகோதரி நூபுர் சனோன் இப்படத்தின் மூலம் நடிகையாக தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பருச்சுரி கோபாலகிருஷ்ணா, புர்ரா சாய் மாதவ், தோட்ட பிரசாத் ஆகியோர் படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கின்றனர். மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவசி இருவரும் இணைந்து படத்திற்கு இசை அமைக்கின்றனர். படத்தில் பிரபாஸ் இணைய இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.