×

கன்னட நட்சத்திரங்களை சந்தித்த பிரதமர் மோடி... சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு பாராட்டு !

 

கன்னட நட்சத்திரங்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக மவுசு கூடிக் கொண்டே வருகிறது. அண்மைக்காலமாக கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎப்‘, ‘கேஜிஎப் 2’, காந்தாரா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த திரைப்படங்களில் இந்திய அளவில் பேசப்பட்டது. 

இந்நிலையில் பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமான நிலையில் இன்று ‘ஏரோ இந்தியா 2023’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது வானத்தில் விமானங்கள் சாகசம் செய்தன. 

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை கன்னட திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான கேஜிஎப் நடிகர் யாஷ், காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ராஜ்குமார், யூடியூப்பர் ஐயோ ஷரத்தா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது கலாச்சார அடையாளத்தை ஊக்குவிப்பதற்காகவும், திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், கன்னட சினிமா துறையினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.