×

அமலாக்கத்துறைக்கு ரூ 25 கோடி அபராதம் கட்டினேனா!..... பிரித்விராஜின் காட்டமான அறிக்கை.

 

சமீபகாலமாக மலையாள திரைத்துறை மீது போதப்பொருள் பயன்பாடு குறித்த  குற்றசாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கருப்புபணம் புழக்கம் மூலமாகதான் படங்கள் தயாரிக்கப்படுவதாக மேலும் ஒரு புகார் வந்துள்ளது.

இது குறித்து மலையாள யூ டியூப் நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது அதாவது நான்கு தயாரிப்பு நிறுவனத்திடம் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனையில் மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் ரூ 25 கோடியை அபராதமாக செலுத்தியதாகவும் அது வேறுயாரும் இல்லை பிரித்விராஜ் தான் என்றும் செய்திகள் பரப்பியது.

இந்த செய்தி குறித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டடுள்ளார் நடிகர் பிரித்விராஜ் அதில், “நான் அமலாக்கத்துறைக்கு ரூ 25 கோடியை அபராதமாக கட்டினேன் என்ற செய்தி குறித்து சமீபத்தில் அறிந்தேன். பொதுவாக இது போன்ற செய்திகளை நான் கவனத்தில் கொள்வதில்லை. தற்போது ஊடக நெறிமுறைகள் வேகமாக மறைந்து வருகிறது.  இந்த தகவல் முற்றிலும் தவறானது. இது போல தவறான தகவல் பரப்பும் சேனல் மீது  சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன். நான் எந்த ஒரு அபராதமும் செலுத்தவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.