×

ரீமேக் படத்தில் “புருவ அழகி” ரசிகர்கள் வரவேற்பு…

தனது கண் சிமிட்டல்கள் மூலம், “புருவ அழகி” என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், ரீமேக் படத்தில் நடிக்கிறார். ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் சீன் உள்ளது. அதன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். படம் ஹிட்டானதோ இல்லையோ? ஆனால், இந்தப் படத்தில் நடித்த ஜோடி ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி
 

தனது கண் சிமிட்டல்கள் மூலம், “புருவ அழகி” என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், ரீமேக் படத்தில் நடிக்கிறார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் சீன் உள்ளது. அதன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். படம் ஹிட்டானதோ இல்லையோ? ஆனால், இந்தப் படத்தில் நடித்த ஜோடி ஹிட்டாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் இஷ்க். இந்த படத்தை மலையாளத்தில் அறிமுக இயக்குனர் அனுராக் மனோகர் என்பவர் இயக்கியிருந்தார். காதலர்களின் காதலில் போலீசாரும் அந்நியர்களின் தலையிடும் குறுக்கிட்டு என்னவெல்லாம் பிரச்சனைகளை அந்த காதலர்கள் சந்திக்கிறார்கள் என்பதுதான். இஷ்க் படத்தின் கதை.

இதனிடையே ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தெலுங்கில் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கான துவக்க விழா பூஜையும் நடைபெற்றுள்ளது. தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடிக்க, தனது கண் சிமிட்டல்கள் மூலம், புருவ அழகி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.. எஸ்.எஸ்.ராஜூ என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.