×

இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் பூரி ஜெகன்நாத் - ராம் பொத்தினேனி.. பூஜையுடன் தொடங்கியது ‘டபுள் இஸ்மார்ட்’ !

 

பூரி ஜெகன்நாத் - ராம் பொத்தினேனி கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இஸ்மார்ட் ஷங்கர்’.  இந்த படத்தில் ராம் பொத்தினேனியுடன் இணைந்து நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. 

இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கிறார். ‘இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர். 

பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.