×

நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்முட்டியுடன் இணையும் முன்னணி நடிகை… புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியீடு !

நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் மம்மூட்டி- நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘தி ப்ரைஸ்ட்’. ஜோஃபின்-டி- சாக்கோ இயக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 11ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதையடுத்து புதிய படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார். ரதீனா இயக்கும் இப்படத்தை எஸ்.ஜார்ஜ் தயாரிக்கவுள்ளார். இதில் மலையாள முன்னணி நடிகை
 

நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி- நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘தி ப்ரைஸ்ட்’. ஜோஃபின்-டி- சாக்கோ இயக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 11ம் தேதி ரிலீசாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதையடுத்து புதிய படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார். ரதீனா இயக்கும் இப்படத்தை எஸ்.ஜார்ஜ் தயாரிக்கவுள்ளார். இதில் மலையாள முன்னணி நடிகை பார்வதி முதல்முறையாக மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். நடிகை பார்வதி, ‘பூ’, ‘மரியான்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘புழு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.