×

சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நக்சலைட் ஆக நடிக்கும் ராம் சரண்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நக்சலைட் ஆக நடிக்கிறார். கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆச்சர்யா படப்பிடிப்பிற்காக மிகப் பெரிய கோவில் செட் ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் ராம் சரண் நடிக்கும்
 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நக்சலைட் ஆக நடிக்கிறார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆச்சர்யா படப்பிடிப்பிற்காக மிகப் பெரிய கோவில் செட் ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் ராம் சரண் நடிக்கும் இந்தக் கதாபாத்திரத்திற்காக மகேஷ் பாபுவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்கவே பின்னர் ராம் சரண் நடிப்பது உறுதியானது. ராம் சரண் இந்தப் படத்தின் 30 நிமிடங்கள் தோன்றுவார் என்றும், நக்சலைட் ஆக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிளாஷ்பேக் போர்சனில் வரும் சிரஞ்சீவியின் வேடத்தில் ராம் சரண் நடிக்க உள்ளாராம்.

ஆச்சார்யா படத்தை  அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள சிரஞ்சீவி அதற்குள் படத்தை முடித்துக் கொடுக்குமாறு கொரட்டலா  சிவாவிடம் கொட்டுகொண்டுள்ளாராம். எல்லாமே திட்டமிட்ட படி நடந்தால், ஆச்சார்யா 2021 ஏப்ரல் 9 அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.