×

பிரனய் ஆவணக்கொலை திரைப்படம்: இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு..

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிரனய் குமார் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், மாருதி ராவ் தொடர்ந்து பிரனயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்ருதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட மாருதிராவ் கடும் கோபத்தில் கூலிப்படையை வைத்து, பிரணய் குமாரை வெட்டிக்கொலை
 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  பிரனய் குமார் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், மாருதி ராவ் தொடர்ந்து பிரனயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அம்ருதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட மாருதிராவ் கடும் கோபத்தில் கூலிப்படையை வைத்து, பிரணய் குமாரை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.  தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஆணவ கொலை செய்யப்பட்ட பிரணாயின் கதையை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை எடுக்க உள்ளதாகவும், பிரணாயின் மனைவி அம்ருதா, மற்றும் ஆணவ கொலைக்கு காரணமாக கருதப்படும் அவரது தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். அதோடு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும்  ராம் கோபால் வர்மா வெளியிட்டார்.

இந்த சூழலில், பிரணய் மற்றும் அம்ருதா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பாக தங்களிடம் அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படத்திற்கு தடைக்கோரி பிரணயின் தந்தை பாலசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ராம்கோபால் வர்மா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.