×

மாமனார் வீட்டில் தசரா கொண்டாடிய ராணா!

நடிகர் ராணா தனது மனைவியுடன் மாமனார் வீட்டில் தசரா கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதிதாக திருமணமான தம்பதிகள் பண்டிகை நாட்களை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவது தெலுங்கில் மக்களின் பாரம்பரிய வழக்கம்.அந்த வகையில், நடிகர் நடிகர் ராணா தசரா பண்டிகையை மனைவியுடன் தனது மாமனார் வீட்டில் கொண்டாடியுள்ளார். ராணா- மிஹீகா பாரம்பரிய உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. ராணா- மிஹீகா பஜாஜ் ஜோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திருமணம்
 

நடிகர் ராணா தனது மனைவியுடன் மாமனார் வீட்டில் தசரா கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புதிதாக திருமணமான தம்பதிகள் பண்டிகை நாட்களை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவது தெலுங்கில் மக்களின் பாரம்பரிய வழக்கம்.
அந்த வகையில், நடிகர் நடிகர் ராணா தசரா பண்டிகையை மனைவியுடன் தனது மாமனார் வீட்டில் கொண்டாடியுள்ளார். ராணா- மிஹீகா பாரம்பரிய உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

ராணா- மிஹீகா பஜாஜ் ஜோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களது நாக சைதன்யா, சமந்தா, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ராணா- மிஹீகா கடற்கரையில் ஜாலியாக படுத்திருந்த புகைப்படங்கள் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராணா கடைசியாக பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.