×

இயக்குநர் சந்தீப் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் அனிமல் படம் - ரன்பீர் கபூர்

 

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.  வரும் டிசம்பர் 1-ம் தேதி அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 


படத்திற்கான புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரன்பீர் கபூர், அனிமல் திரைப்படம், இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது என்றும், இது அவருடைய பயோபிக் என்றும் கூறியிருக்கிறார்.