×

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தில் ரஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுதான்... வெளியான அசத்தல் போஸ்டர்!

 

'புஷ்பா' படத்திலிருந்து நடிகை ரஷ்மிகா மந்தான்னாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா' திரைப்படம் உருவாகி வருகிறது. ரஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் ஃபஹத் பாசில் புஷ்பா படத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைக்கிறார். மித்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். 

இந்தப் படம் சந்தனக் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது. எனவே படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது ரஷ்மிகாவின் கதாபாத்திரம் குறித்த போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஷ்மிகா இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவரின் அசத்தலான போஸ்டரும் வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது.