×

ராமிகா சென்னாக மிரட்டும் ரவீனா… ‘கே.ஜி.எஃப்: 2’ படத்தின் போஸ்டர் வெளியானது!

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு ‘கே.ஜி.எஃப்: 2’ படக்குழு அவரது கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். நடிகை ரவீனா டாண்டன் இன்று தனது 46 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரவீனா கே.ஜி.எஃப்: 2 படத்தில் ராமிகா சென் என்ற வலிமை மிக்க அரசியல் தலைவராக நடிக்கிறார். இந்நிலையில் ரவீனாவின் பிறந்தநாள் பரிசாக ராமிகா
 

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு ‘கே.ஜி.எஃப்: 2’ படக்குழு அவரது கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை ரவீனா டாண்டன் இன்று தனது 46 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரவீனா கே.ஜி.எஃப்: 2 படத்தில் ராமிகா சென் என்ற வலிமை மிக்க அரசியல் தலைவராக நடிக்கிறார். இந்நிலையில் ரவீனாவின் பிறந்தநாள் பரிசாக ராமிகா சென் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு கே.ஜி.எஃப்: 2 படக்குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரவீனா கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் நடிக்கவில்லை. இரண்டாம் பாகத்தில் இருந்து தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய அளவில் ப்ளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் இணைந்துள்ளனர்.