×

காந்தாரா 2 படத்தை பிரம்மாண்டமாக இயக்க ரிஷப் முடிவு... எகிறும் பட்ஜெட்...

 

காந்தாரா 2 படத்தை, முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இயக்க ரிஷப் ஷெட்டி முடிவு செய்துள்ளார். 

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். , 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், காந்தாரா 2 படத்தை ரிஷப்ஷெட்டி கையில் எடுத்துள்ளார். இத்திரைப்படம் கி.பி. 301 , கி.பி.400 காலகட்டத்தில் நடப்பது போல உருவாகிறதாம். மேலும், படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என படத்தின் முடிவு செய்துள்ள ரிஷப் ஷெட்டி, பட்ஜெட்டை 125 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.