×

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் உருவான வேதாளம் படம் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்தப் படத்திற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்துள்ளதாகத் தெரிகிறது. வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின்
 

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் உருவான வேதாளம் படம் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்தப் படத்திற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்துள்ளதாகத் தெரிகிறது.

வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மெஹர் ரமேஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண் “சிரஞ்சீவியுடன் உங்களது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார். எனவே வேதாளம் படத்தில் ரீமேக்கிற்காக தான் இந்தக் கூட்டணி இணைய உள்ளனர் என்று உறுதியாகியது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளார்களாம்.

சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் நிறைவு பெற்றவுடன் வேதாளம் படத்தின் ரீமேக் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.