×

சைத்தான் படத்தின் போஸ்டர் ரிலீஸ்

 

1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தோலி சாஜா கி ரக்னா. அக்‌ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா, வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

படத்திற்கு சைத்தான் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சைத்தான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி வௌியாகிறது.