‘சலார்’ பட முதல் நாள் வசூல் விவரம் இதோ!....
நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியான சலார் படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆன படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக மிரட்டியுள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்திற்கு நேமறையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் படம் முதல் நாளே ரூ.165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் மொத்தமாக சேர்த்து ரூ 50 கோடியும், தெலுங்கில் ரூ 65 கோடியும் தமிழகத்தை பொறுத்தவரை ரூ5 கோடியும் வசூலாகியுள்ளதாம். தொடர்ந்து படத்தில் வசூல் அதிகரிக்க கூடும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.