×

மீண்டும் தள்ளிப்போகும் சலார் திரைப்படம் 

 

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை வெளியானது. சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. 

தற்போது, அதே தேதியில் ஷாருக்கான் நடித்திருக்கும் 'டன்கி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதே நாளில் 'சலார்' வெளியானால், வசூல் பாதிக்கப்படும் என்பதால், படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு தள்ளிவைக்க படக்குழு ஆலோசித்து வருகிறது.