×

சலார் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

எதிர்பாராத காரணங்களால் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை வெளியானது. சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.