ரசிகர்களுக்கு சல்மான்கான் அறிவுரை
Nov 14, 2023, 10:51 IST
2012ல் வெளியான முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற சல்மான் கானின் 'டைகர்' கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதை தொடர்ந்து 'டைகர் ஜிந்தா ஹே' என்ற படம் 2017-ம் ஆண்டு வெளியானது. இதனை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார். இதன் மூன்றாம் பாகம் தற்போது 'டைகர் 3' என்ற பெயரில் உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் சல்மான்கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. மராட்டியத்தில் டைகர் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், திரையரங்கில் பட்டாசுகளை வெடித்தனர். இதனால், திரையரங்கில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.