×

புராண கதையில் நடித்துள்ள சமந்தா... ‘சகுந்தலம்‘ தமிழ் டிரெய்லர் வெளியீடு !

 

 நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா முதன்மை கதாபாத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் துஷ்யந்த் மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். 

இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்பிணியான சகுந்தலை எப்படி இன்னலுக்கு ஆளாகிறார் என்பது குறித்து இந்த டிரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

<a href=https://youtube.com/embed/qirqJ_-k0gg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qirqJ_-k0gg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">