×

‘அலைப்போயுதே’ ஸ்டைலில் உருவாகியுள்ள ‘குஷி’... கவனம் ஈர்க்கும் சமந்தா பட டிரெய்லர் ! வெளியீடு 

 

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள ‘குஷி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. காதல் ரொமென்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். சிவ நிர்வணா இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமந்தாவின் க்யூட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த டிரெய்லரில் காஷ்மீரில் வசிக்கும் முஸ்லீம் பெண்ணாக காட்டப்படும் சமந்தா, பின்னர் நான் பேகம் இல்லை பிராமின் என்று உண்மை போட்டு உடைக்கிறார். 

விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் ஒருவரையொருவர் காதலிக்கும் நிலையில் அவர்களது குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். திருமணத்திற்கு இருவருக்கிடையே ஏற்படும் பிரச்சனை வைத்து உருவாகியுள்ள கதைக்களம் இந்த படம். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையே நடக்கும் க்யூட் காதல் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

  <a href=https://youtube.com/embed/UfXufW76wxI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UfXufW76wxI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">