×

“ஒரு படத்துல நடிக்கணும்னு கூட்டிட்டு போவாங்க… ஆனா அங்க போனா” ஷகிலா வெளியிட்ட ரகசியம்!

நடிகை ஷகிலா மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர். பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலா படங்களும் தியேட்டரில் வெள்ளிவிழா கண்டு ஓடிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் மோகன்லால் மம்முட்டி போன்ற நடிகர்களின் படங்களுக்கு ஃடப் கொடுக்கும் ஷகிலா நடித்த படங்கள். 90-களில் ஷகிலா நடித்த படங்கள் மூலம் அநேக தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு கல்லா கட்டினார்கள். கவர்ச்சிநட்சத்திரம் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீபதி பத்மநாபா என்பவர் , “ஷகிலா
 

நடிகை ஷகிலா மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர். பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலா படங்களும் தியேட்டரில் வெள்ளிவிழா கண்டு ஓடிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் மோகன்லால் மம்முட்டி போன்ற நடிகர்களின் படங்களுக்கு ஃடப் கொடுக்கும் ஷகிலா நடித்த படங்கள்.
90-களில் ஷகிலா நடித்த படங்கள் மூலம் அநேக தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு கல்லா கட்டினார்கள்.

கவர்ச்சிநட்சத்திரம் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீபதி பத்மநாபா என்பவர் , “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
நான் மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில் என்னை ஒரு படம் நடிக்க வேண்டும் என்று அழைத்து சென்று சில காட்சிகளை படமாக்குவார்கள். ஆனால், ஒரு படம் என்று கூறி நிறைய காட்சிகளை படமாக்கி அந்தக் காட்சிகளை வேறு சில படங்களில் இணைத்து அவற்றை நான்கைந்து படங்களாக ரிலீஸ் செய்து விடுவார்கள். ஆனால், எனக்கு ஒரு படத்தில் நடித்தற்கான சம்பளம் தான் கொடுக்கப்படும்.

இந்த மாதிரியெல்லாம் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். ஆனால், சினிமாவில் நடிக்க விருப்பமிருந்தும் நான் இதுவரை யாரிடமும் வாய்ப்புக்காக நின்றதில்லை. யார் காலையும் பிடித்ததில்லை. இருந்தாலும் சினிமா உலகம் என்னைத் தேடி வந்தது”. என்றும் ஷகிலா கூறியுள்ளார். .