×

முக்கிய இடத்தில் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர்... 'RC 15' குறித்து புதிய அப்டேட் !

 

ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று நியூலாந்தில் உள்ள‌ மனிதர்கள் செல்ல முடியாத ஒரு இடத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சார்மினர் நினைவு சின்னம் அருகே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பு பிசியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.